நான் ரசித்த படங்களில் அரைவாசிக்கு மேல் இவரது படங்கள் தான்.
மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, பம்பாய் , அலைபாயுதே, உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, குரு என சொல்லிக் கொண்டே போகலாம்.
என்ன.. இறுதியாக வெளிவந்த அவரது படம் கடல் தான் சுனாமியால் ரொம்ப பாதிக்கப்பட்டு விட்டது.
இருந்தபோதிலும் அடுத்ததாக நாகர்ஜுனா,ஐஸ்வர்யாராய் ஆகியோரை வைத்து அதிக பட்ஜெட்ல் புதிய படம் எடுக்கப்போகிராராம். வாழ்த்துக்கள் உண்டாகட்டும்..
இவரது முதல் படம் 1983 ஆம் ஆண்டு கன்னடா திரைப்படமான பல்லவி அனு பல்லவி ஆகும். இவரது திரைக்கதைக்கு கேரளா அரசின் சிறந்த திரைக்கதயாளர் என்ற விருது கிடைத்தது. இவரது 3 வது படம் தான் முதலாவது தமிழ் படமான முரளி,ரேவதி நடித்த பகல் நிலவு. அதே வருடத்தில் தமிழில் இதயக் கோவில் என்ற காதல் கலந்த படம் நடிகர் மோகனின் நடிப்பில் வெளிவந்து அமோக வரவேற்ப்பைப் பெற்றது.
இப்படியாக மௌன ராகம் என்ற காதல் திரைப்படம் அதாவது நீங்க "ராஜா ராணி" படம் பார்க்கும்போதே இயக்குனர் அட்லி மௌன ராகம் கதை கொஞ்சம் சுட்டிருப்பாரோன்னு நெனச்சிருப்பீங்க.காதலுக்குப் பின்னும் வாழ்க்கை உண்டு எனக் கூறிய எனக்குத் தெரிந்த முதலாவது தமிழ் படம் அது தான்.
இப் படத்திற்காக மணி ரத்னம் தன் முதலாவது "Film Fare Award" ஐ பெற்றுக்கொண்டார்.
பின் உலக நாயகன் கமலின் நடிப்பில் "நாயகன்" இப்படம் தேசிய ரீதியாக மணி ரத்னத்தை அடையாளப் படுத்திய படமாகும். இப் படம் 2௦௦5 Times Magazine வெளியிட்ட All-Time 100 Movies என்ற List ல் இடம்பெற்றுள்ளது. ஒரு சாதாரண மனிதன் எவ்வாறு சமூக பிரச்சனைகளை ஒழிக்க டான் ஆகிறார் என்பதை சுவைபட இளையராஜாவின் இசையுடன் கூறும் அருமையான படம்.
இப்படத்திற்கு தேசிய அளவில் 3 விருதுகள் கிடைத்தது.
இவ்வாறாக "கீதாஞ்சலி, அஞ்சலி, தளபதி, ரோஜா ,திருடா திருடா,பம்பாய், இருவர், உயிரே, அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், யுவா, ஆயுத எழுத்து , குரு, ராவணன் இறுதியாகக் கடல் என சிறந்த திரைப்படங்களை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கி மகிழ்ச்சிப்படுத்தினார்.
குறிப்பாக இவரது படங்கள் காதலுடன், அரசியல், அடி தடி என்பன கலந்த படங்களாக இருக்கும். "பம்பாய்" , "ரோஜா" என்பன முறையே மதவெறி, தீவிரவாதம் என்பவற்றின் அடிப்படையில் வெளிவந்து தேசிய ரீதியில் விருதுகளை வென்றவை.
"அலைபாயுதே" எனக்கு மிகவும் மிகவும் பிடித்த படம். மாதவனின் அறிமுகம் ஷாலினியின் கண்கள் என பார்க்கும் ரசிகர்களை படத்துக்குள்ளேயே ஈர்க்கும் வகையில் அமைந்தன. படத்தில் பெரிய பெரிய வசனங்களே இருக்காது எல்லாம் சின்ன சின்ன வசனங்களில் எம்மை காதல் கொள்ள வைக்கும்.
நடிகர் விக்ரம் சமீபத்தில் இடம்பெற்ற Vijay TV யின் நிகழ்வு ஒன்றில் தனது ஒரு கண் எனக் கூறியிருந்தார்.
அந்தளவுக்கு பல நடிகர்களுக்கு ஒரு திருப்புமுனயாக இருந்துள்ளார். சூர்யாவுக்கு ஆயுத எழுத்து மிகப் பெரிய ஹிட்.
1991 ஆண்டுகளில் மம்முட்டி, ரஜனி யை வைத்து தளபதி இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.
இன்னொரு புகழ் "எல்லாப்புகழும் இறைவனுக்கே..." நம் இசைப்புயல் ரகுமானின் இசை திறமையைக் கண்டு தன் படமான ரோஜாவில் முதல் வாய்ப்பைக் கொடுத்து அந்தப் படத்தில் இடம்பெற்ற "காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே..." என உலக மக்கள் அனைவராலும் இன்றும் வாயில் முனுமுனுக்கும் ஒரு மெலடி பாடல்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் "இயக்குனர் மணி ரத்னம்.."
நன்றி
பரதன்
0 comments:
கருத்துரையிடுக