Past Perfect
Past Perfect மிகவும் இலகுவானதொன்றாகும். இது இறந்த காலத்தை பற்றி இறந்த காலத்திலேயே விபரிக்க பயன்படுகிறது.
have ன் இறந்த காலமாகிய had ஐ இணைத்து past pariciple வினை சொல்லை சேர்த்து Past Perfect உருவாக்கப்படும்.
had + [past participle]
Eg :-
I
had finished my work
- இறந்த காலத்தில் இடம்பெற்ற 2 நிகழ்வுகள் பற்றி குறிப்பிடப்படும். அதில் ஒரு நிகழ்வு மற்றைய நிகழ்வுக்கு முன்னர் உறுதியாகவும், முழுமையாகவும் நடந்து முடிந்த ஒன்றாக இருக்கும்.
உதாரணமாக :
நான் ஒரு புகையிரதத்தை பிடிக்க சென்றேன் , நான் போவதட்கு முன்பே புகையிரதம் சென்று விட்டது
இதனை புகையிரத நிலைய பொறுப்பதிகாரி (Station Master) "நீங்கள் தாமதமாக வந்துவிட்டிர்கள்.. புகையிரதம் புறப்பட்டு விட்டது " என கூறுவார்
"You are too late. The train has left."
இதனை நான் எனது ஒரு நண்பருக்கு கூறும் போது Past Perfect ஐ பயன்படுத்தி பின்வருமாறு சொல்லுவேன் .
When I arrived, the train had left.
இங்கு எல்லாமே இறந்த காலத்தையே மையமாகக் கொண்டு வரும்.
- பொதுவாக Past Perfect ஐ Reported Speech ல் பயன்படுத்தப்படும்
Reported Speech என்பது நாம் கேள்விப்பட்ட ஒன்றை அல்லது பார்த்த ஒன்றை இன்னொருவருக்கு தெரிவிப்பதாகும்.
என்னை பார்த்து ஒரு பெண் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னது என வையுங்களேன். அதை ஆங்கிலத்தில்
She said "I love you"
இங்கு
ஒருவர சொன்ன வாக்கியத்தை இரட்டை மேட்கொள் குறிக்குள் எழுதுவோம்.
இதையே நான் என் நண்பனுக்கு தெரிவிக்கும் போது
அவள் எனக்கு சொன்னாள் என்னை அவள் காதலிப்பதாக -
She said that she loved me
Past Perfect எங்கே பாவிக்க கூடாது ?
ஒரு தொடரான சம்பவத்தை நீங்கள் குறிப்பிடாத பட்சத்தில் Past Perfect பயன்படுத்த தேவை இல்லை.
உதாரணமாக
I had cleaned it off the door.
கதவிலிருந்து அதை நான் சுத்தம் செய்தேன்.
இவ்வாக்கியமானது எந்த விதமான Past Perfect க்குரிய உணர்வையும் ஏட்படுத்தாது. காரணம் சுத்தம் செய்வதட்கு முன்னதாக ஏதோ ஒரு விடயம் இடம்பெற்று இருப்பதை விளக்க தான் Past Perfect உபயோகப்படும். இங்கு அப்படி இல்லை,
கீழுள்ள வசனத்தை பார்க்கவும்
When I arrived, the train had left.
என்பது ஒரு தொடரான வாக்கியமாகும். நான் செல்வதட்கு முன்னதாக புகையிரதம் புறப்பட்டு விட்டது .
ஆகவே
Past Perfect தொடரான ஒரு சம்பவங்களை இறந்த காலத்தில் விளக்குவதாக இருக்க வேண்டும்.
Past Continuous
Past Continuous ஐ Past Progressive எனவும் அழைப்பார்கள். இதே நேரத்தில் இறந்த காலத்தில் நடந்துகொண்டிருந்த ஒரு சம்பவத்தை விபரிக்க Past Continuous பயன்படுகிறது.
Was /Were உடன் வினைச் சொல்லின் Present participle (
வினைச்சொல் + ing ==>> உதாரணமாக :-
was/were help + ing => was/were helping
ஐ இணைத்து Past Continuous உருவாக்கப்படும்.
சில வசனங்கள் உதாரணமாக:-
- They were watching a movie at Satyam theatre
- The man was walking towards that junction
- இறந்த காலத்தில் தொடர்ந்து நடந்துகொண்டிருந்த சம்பவம் ஒன்று ஏதாவது ஒரு செயலால் தடைபடும் வரை நடந்ததை விபரிக்க பயன்படும்.
உதாரணமாக :-
அவன் மேடையை விட்டு இறங்கும் வரை பார்வையாளர்கள் கை தட்டிக்கொண்டிருந்தார்கள் .
The audience was applauding until he fell off the stage.
அவள் வரும்போது நான் இரவு உணவு செய்து கொண்டிருந்தேன்.
I was making dinner when she arrived.
- இறந்த காலத்தில் நடந்த ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை மேட்கோள் காட்ட உதவும்.
Eg:-
At 6 o’clock, I was eating dinner.
6 மணி இருக்கும் போது நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
- இறந்த காலத்தில் இடம்பெற்ற வழக்கமான ஒரு செயலை விபரிக்க உதவும்
Eg:
She was talking constantly in class in those days.
அந்த நாட்களில் அவள் வகுப்பில் தொடர்ந்து கதைத்துக்கொண்டே இருக்கிறாள்
Past Perfect Continuous
Past Perfect Continuous ஐ Past Perfect Progressive எனவும் அழைக்கப்படும்.
இறந்த காலத்தில் தொடங்கி இறந்த காலத்திலேயே தொடர்ந்து ஒரு குறிப்பிடட நேரம் வரை இடம்பெற்ற ஒரு நிகழ்வை விபரிக்க இது பயன்படும்.
அதாவது , கிட்டத்தட்ட Past Perfect போல அமைந்தாலும் இறந்தகாலத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வுக்கு முன்னதாக நீண்ட நேரமாக அல்லது நீண்ட காலமாக நடந்த ஒரு சம்பவத்தை விபரிக்க உதவும்.
Past Perfect ல் இரண்டு சம்பவங்களும் இறந்த காலமாகவே அமையும். Past Perfect Continuous ல் குறிப்பிடப்படும் ஒரு சம்பவம், மற்றைய சம்பவம் நிகழும் போது நடந்துகொண்டிருந்த சம்பவமாக இருக்கும்.
Past Perfect Continuous பின்வரும் சமன்பாட்டின் மூலம் உருவாக்கப்படும்.
had been + the verb’s present participle (root + -ing)
கீழ்வரும் உதாரணங்களை பார்க்கவும்
When I arrived, Ram had been waiting for two hours.
I had been working for an NGO when I got the new job in an IT company
எனக்கு IT கம்பெனி ஒன்றில் வேலை கிடைக்கும் போது நான் ஒரு NGO ல் வேலை செய்துகொண்டிருந்தேன்.
When, for, since, and before போன்ற இணைக்கும் சொற்களை past perfect continuous உருவாக்கப் பயன்படுத்தப்படும்.
He had been started watching movies since 2016
She had been started working before she got married
அடுத்த பதிவில் நிகழ்காலம் தொடர்பான விடயங்களை பார்க்கலாம்.