இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 15 டிசம்பர், 2019

தினமும் அரைமணி நேரம் உங்கள் குரலை தமிழுக்கு தந்துதவுங்கள்.......!

நன்றி கூகிள்

UNESCO அழிந்து வரும் மொழிகளில் தமிழை 8 வது இடத்தில் படியியலிட்டுள்ளதாக அண்மையில் முகநூல் பதிவொன்றில் படித்தேன். இது உண்மையற்ற ஒரு பதிவு என்பது கூடத்தெரியாமல் பலர் மேடைகளில் பேசித்தள்ளுகிறார்கள் என்பதுதான் மிகக் கவலைக்குரிய விடயம்.

ஆனால், எதிர்காலத்தில் அழிய வாய்ப்புக்கள் உண்டு என்பதும் ஒரு அச்சத்திற்குரிய விடயம் அல்லவா...?. 
எனவே. நம் மொழியை முடிந்தவரை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லவேண்டிய கடப்பாடு எம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

சரி, சொல்ல வந்த விஷயத்தை சுருக்க சொல்லி விடுகிறேன்.
Google, Facebook, Apple என முன்னனி நிறுவனங்களும் தங்கள் சேவையை பல மொழிகளில் விஸ்தரித்து விட்டன. அதேநேரம், தமிழ் மொழியின் பயன்பாடும்  இணையத்தளத்தில் கணிசமான அளவு அதிகரித்து வருகிறது.

நீங்கள் அறிந்திருப்பீர்கள் Google Speech -To -Text எனப்படும் ஒரு சேவை உள்ளது. நீங்கள் உங்கள் வாயால் சொல்லச் சொல்ல அது தானாக எழுத்து வடிவங்களுக்கு மாற்றிக்கொள்ளும். ஆனால் இந்த சேவை ஒரு வரையறுக்கப்பட்ட சேவையாகும். அதாவது, இந்த சேவையினை நாம் பயன்படுத்திக்கொள்ள இலவசமாக விடப்பட்டுள்ளது அதையே நாம் பிற எமது தேவைகளுக்கு பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த பிரச்சனையை புரிந்து கொண்ட சிலர் ஒன்றிணைந்து Open Source (திறந்த வெளி) மென்பொருள் சேவையை உருவாக்கியுள்ளனர். Mozilla நிறுவனத்தின் Common Voice என்ற செயற்திட்டம் மூலம் இந்த சேவையினை இலவசமாக பெற்று செயற்படுத்திக் கொள்ளலாம். 
இந்த செயற்றிட்டம் முழுக்க முழுக்க திறந்த வெளி அதாவது யாருக்கும் எப்போதும் எந்த தங்குதடைகளும் இன்றி பெற்றுக்கொள்ளக் கூடிய சேவை.

இதற்கு, முதற்கட்டமாக பல தரவுகள் தேவைப்படுகின்றன. இந்த செயர்த்திட்டத்தில் Machine Learning, Deep Learning எனப்படும் தொழிநுட்பங்கள்பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சிறு பிள்ளை எப்படி சிறுபராயத்திலிருந்து அதன் சுற்று சூழலை கவனித்து அதன் மூலம் கற்றுணர்ந்து பெரிய மனிதர் ஆகிறதோ அதுபோலக் கணணிகளுக்கும் நாம் கற்பிக்க வேண்டும்.

எவ்வளவு தரவுகளை கணனிக்கு புகட்டுகிறோமோ அவ்வளவு தூரத்திற்கு துல்லியமான முறையில் கணனி முடிவுகளை எடுக்கும் திறனைப் பெறும்.
இந்த செயற்திடடத்தைப் பொறுத்தவரையில் உங்கள் ஒவ்வொருவரதும் பங்களிப்பு மிக மிக அவசியம் தேவைப்படுகிறது.

https://voice.mozilla.org/ என்ற இந்த தளத்திற்கு சென்று உங்கள் கணக்கினை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

கணக்கை உருவாக்கும் விடயங்களை கீழ்வரும் படங்கள் மூலம் பார்க்கவும்.

பின் தோன்றும் திரையில் உங்கள் GMAIL கணக்கை பயன்படுத்தி இங்கு கணக்கை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

உங்கள் மின்னஞ்சல் கணக்கினை சொடுக்கவும்.

அடுத்த திரை இவ்வாறு தோன்றும்.....



பின்னர் தோன்றும் திரையில் உங்கள் username ஐ கொடுத்து உங்கள் வயது எல்லையை கொடுத்துவிடுங்கள். உங்களால் பதிவு செய்யப்படும் குரல்கள் உங்கள் பெயரில், உங்கள் வயதெல்லையுடன் சேமித்து வைக்கப்படும்.

இனி save செய்து கொள்ளுங்கள்.

பின்னர் உங்கள் கணணித்திரையின் வலதுபக்க மேல் மூலையில் மொழித்தெரிவில் தமிழைத் தெரிவு செய்து கொள்ளுங்கள்.


பின் தோன்றும் திரையில் இடது பக்க மேல் மூலையில் "பங்களி" என்பதை அழுத்தவும்.


இப்போது நீங்கள் 2 விடயங்கள் மூலம் பங்களிக்கலாம்.

1. திரையில் தோன்றும் வசனங்களை வாசித்து அதனை பதிவு செய்யலாம்


Mic ன் படத்திற்கு மேல் சொடுக்கிவிட்டு தரப்பட்ட வாக்கியத்தை வாசிக்கவும். வாசித்தவுடன் மீண்டும் அதை சொடுக்க வேண்டும். வலது பக்க கரையில் நீங்கள் பேசியவற்றை மீண்டும் கேட்க்க முடியும். அதில் ஏதாவது பிழை இருப்பின் மீண்டும் பதிவு செய்து கொள்ள முடியும்.


2. "கவனி" என்பதை சொடுக்கினால் உங்களை போன்று பிறர் பதிவு செய்த ஒலி களை கேட்டு அவை திருப்திகரமானதாக இருப்பின் அவற்றை ஆம் என்றும் இல்லை என்றும் தெரிவு செய்யுங்கள்.


இது மிகவும் சுலபமாக இருப்பினும் உங்களது பொன்னான நேரம் என்பது மிக முக்கியமானதாகும். இதை ஒரு பொழுதுபோக்காக எடுத்து தினமும் ஒரு அரைமணிநேரம் முயற்சித்து செய்து வந்தால் தமிழை மேலும் விரிவடையச் செய்யலாம்.

பதிவு செய்யப்பட்ட அனைத்து தரவுகளும் https://voice.mozilla.org/en/datasets இந்த தளத்தில் சென்று பதிவிறக்கிக் கொள்ளலாம். ஆனால், இன்னும் தமிழ் மொழியை தரவிறக்குவதற்கு போதுமான அளவு தரவுகள் கிடைக்கவில்லை. கூடிய விரைவில் தமிழை கொண்டு வருவதற்கு பலரும் தங்கள் நேரத்தை ஒதுக்கி உதவி வருகிறார்கள்.

உங்கள் பங்களிப்பையும் கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி,
பரதன்.

2 கருத்துகள்:

  1. இதற்கு தனியான மின்னஞ்சல் பயன்படுத்தவேண்டுமா என்பதை தெரிவிக்கவும் தங்கள் பணி வளர வாழ்த்துக்கள் sharatha

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசியம் இல்லை. நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் மின்னஞ்ச்சல் குறிப்பாக GMAIL ஐ பயன்படுத்தினால் போதும்.

      நீக்கு