C Language ஆனது யாருக்கு உதவுகிறதோ இல்லையோ, Computer Engineer களுக்கு அவசியமானது. சரி, தொடர்ந்து பார்க்கலாம்..
1.Wibit.net - http://wibit.net/
இது தான் முதன் முதலாக C Language கற்க பல வசதிகளையும் உள்ளடக்கிய இணையத்தளமாகும். அதாவது, இங்கு வீடியோ டுட்டோரியல்ஸ் உள்ளது. இவற்றை நீங்கள் தரவிறக்கி கற்றுக்கொள்ளலாம், அல்லது PDF file ஆக நிறுவியும் கற்கலாம். அது உங்கள் விருப்பம்.
2.Cplusplus.com - Cplusplus.com
இத் தளத்தில் நீங்கள் PDF மூலம் தரவிறக்கியும் கறக்கலாம்... அல்லது அங்கு குறிப்பிடப்பட்ட பிரிக்கப்பட்ட பாடம், பாடமாகவும் கற்கலாம். மேலும், இங்கு Forum option உம் உள்ளது. அதாவது உங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருப்பின் வேறு பலருடனும் அது பற்றி கலந்து ஆலோசித்து அவர்களின் சிந்தனையை பரிமாறிக் கொள்ளலாம்
3. Academictutorials.com - Academictutorials.com
இங்கு பல விதமான முறைகளில் பாடங்கள் பிரிக்கப்பட்டு காணப்படுகிறது. மேலும் இங்கு C++ Language பற்றி உதாரணங்கள் என்பவற்றுடன் தெளிவாக விளங்கக்கூடியதாக உள்ளது.
இதைவிட, எவளவு தூரம் உங்களுக்கு இந்தப் பாடங்கள் பற்றி உங்களுக்கு விளங்கியுள்ளது என்பதை அறிய ஒரு Quiz மாதிரியான வடிவில் பரீட்சை காணப்படுகிறது. நீங்கள் அதன் மூலம் பயன் பெற்றுக்கொள்ளலாம்.
நிச்சயமாக இந்தத் தளம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
4. CProgramming.com - CProgramming.com
இங்கு, நீங்கள் C மற்றும் C++ பற்றிய சில டிப்ஸ் களை அறியலாம். இங்கும், Quiz வடிவிலான பரீட்சை முறை உள்ளது.மேலும் இதன் மூலம் உங்களுக்கு உங்கள் திறமையின் மூலம் வேலை பெறக் கூடிய வாய்ப்பையும் பெறலாம்.
என்ன நண்பர்களே...?? எனது பதிவு உதவியாக அமைந்திருக்கும் என்ற நம்பிக்கையில் உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.
நன்றி : பரதன்